துளிகள்...


    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2 முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி 2019-20 சீசனுக்கு தயாராகும் வகையில் ஆமாதபாதில் உள்ள அதானி சாந்திகிராம் மைதானத்தில் 4 வாரங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளது. தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரகோரி மற்றும் வீரர்கள் நேரடியாக செப்டம்பர் 1-ஆம்தேதி முகாமில் பங்கேற்பர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


    லக்னெளவில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி மகளிர் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் அஞ்சலி தேவி 51.53 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். 


    உலக தடகளப் போட்டிக்கான தகுதி நேரம் 51.80 வினாடிகள் ஆகும். 100 மீ. ஓட்டத்தில் தூத்தி சந்த் 11.34 வினாடிகளில் கடந்தார். உலகப் போட்டிக்கு தகுதி பெற அவர் வெள்ளிக்கிழமை இறுதிச் சுற்றில் 11.24 வினாடிகளில் கடக்க வேண்டும்.


    மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் நடைபெற்று வரும் 15 வயதுக்குப்பட்டோர் மகளிர் சாஃப் கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய-நேபாள அணிகள் தகுதி பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com