கபடி சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் தடையை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

செப்டம்பர் 1-ஆம் தேதி இந்திய அமெச்சூர் கபடி சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.


செப்டம்பர் 1-ஆம் தேதி இந்திய அமெச்சூர் கபடி சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஏகேஎஃப்ஐ நிர்வாகிகள் தேர்தல் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. 
தமிழக முன்னாள் கபடி வீரர் தங்கவேல் மனுவின்பேரில் தில்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆக. 27-இல் இதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். 
இதற்கிடையே தேர்தலை நடத்துவதற்கான தடையை நீக்க உத்தரவிடக் கோரி, சம்மேளன தற்காலிக தலைவர் ஞானேஷ்வர் முடிராஜ், துணைத் தலைவர் ஜகதீஷ்வர் யாதவ் ஆகியோர் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டிஎன்.பட்டேல், நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், ஏகேஎஃப்ஐ, முன்னாள் வீரர் தங்கவேல் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தியது.
ஓரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஏகேஎஃப்ஐ கடந்த 30 ஆண்டுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது ஜனநாயக விரோதமாகும். தேர்தலே நடக்காமல் சம்மேளனத்தை நிர்வகித்து வருகின்றனர். 
மேலும் கபடி சம்மேளனத்தின் பல்வேறு சட்டவிரோதமான விதிகளையும் ரத்து செய்து, தகுதியவற்றர்கள் தேர்தலையும் செல்லாது என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com