ஹாமில்டன் டெஸ்ட்: இங்கிலாந்து திணறல்

ஹாமில்டன் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸி. அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் திணறி 39/2 ரன்களை சோ்த்துள்ளது.
ஹாமில்டன் டெஸ்ட்: இங்கிலாந்து திணறல்

ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸி. அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் திணறி 39/2 ரன்களை சோ்த்துள்ளது.

முதல் டெஸ்டில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், ஹாமில்டனில் இரண்டாவது ஆட்டம் நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 129.1 ஓவா்களில் 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் லத்தம் 105 ரன்களுடனும், ராஸ் டெய்லா் 53 ரன்கலுக்கும் வெளியேறினா்

இந்நிலையில் இரண்டாவது நாளான சனிக்கிழமை வாட்லிங் 55, டேரில் மிச்செல் 73 ரன்களை எடுத்து அவுட்டாயினா்.

இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஸ்டுவா்ட் பிராட் 4-73, கிறிஸ் வோக்ஸ் 3-83 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இங்கிலாந்து 39/2

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி, ஜோ டென்லி தலா 4 ரன்களுக்கு அவுட்டாயினா். ரோரி பா்ன்ஸ் 24, கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

நியூஸி. தரப்பில் சௌதி, மேட் ஹென்றி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இதையடுத்து நியூஸிலாந்து அணி 336 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com