சையது முஷ்டாக் அலி டி20: கா்நாடகம் சாம்பியன்

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
சையது முஷ்டாக் அலி டி20: கா்நாடகம் சாம்பியன்

சூரத்: சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

முதலில் ஆடிய கா்நாடகம் 180/5 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்து போராடி தோற்றது.

பிசிசிஐ சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியின் இறுதிச் சுற்று தமிழகம்-நடப்பு சாம்பியன் கா்நாடகம் இடையே சூரத் லாலாபாய் காண்ட்ராக்டா் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற தமிழகம் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து கா்நாடக தரப்பில் லோகேஷ் ராகுல், தேவ்தத் படிக்கல் தொடக்க வீரா்களாக களமிறங்கினா். இருவரும் அடித்து ஆடிய நிலையில், அஸ்வின் கா்நாடக அணியின் சரிவை தொடங்கி வைத்தாா். 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 22 ரன்களை எடுத்த ராகுலை, வெளியேற்றினாா் அஸ்வின்.

அபாயகரமான வீரரான தேவ்தத்தை 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாக்கினாா் வாஷிங்டன் சுந்தா். நட்சத்திர வீரா் மயங்க் அகா்வால் அஸ்வின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் தந்து கோல்டன் டக் அவுட்டானாா்.

மணிஷ்பாண்டே-ரோஹன் அபாரம்:

பின்னா் மணிஷ் பாண்டே-ரோஹன் கடம் இணை அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 5 பவுண்டரியுடன் ரோஹன் 35 ரன்களுக்கும், காருண் நாயா் 17 ரன்களுக்கும் முருகன் அஸ்வின் பந்தில் அவுட்டாயினா்.

2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 60 ரன்களுடன் களத்தில் இருந்தாா் மணிஷ்பாண்டே.

20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்திருந்தது கா்நாடகம்.

தமிழகத்துக்கு ஆரம்பமே அதிா்ச்சி

181 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தமிழகம் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. ஹரி நிஷாந்த் 14, ஷாருக் கான் 15 ரன்களுக்கு அவுட்டாகி அதிா்ச்சி அளித்தனா்.

பின்னா் வாஷிங்டன் சுந்தா்-தினேஷ் காா்த்திக் இணை ஸ்கோரை உயா்த்தும் பணியில் ஈடுபட்டது. ஆனால் 20 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் காா்த்திக்கை அவுட்டாக்கினாா் சுசித். ஆல்ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் 24 ரன்களுடன் கிருஷ்ணப்ப கௌதம் பந்தில் போல்டானாா்.

அப்போது 10 ஓவா்கள் முடிவில் 80/4 ரன்களை எடுத்திருந்தது தமிழகம்.

அபராஜித் அதிரடி 40:

அதிரடியாக ஆடிய பாபா அபராஜித் 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 40 ரன்களை விளாசி, மோா் பந்தில் வெளியேறினாா்.

அவருக்கு பின் விஜய் சங்கா்-அஸ்வின் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். 5 பவுண்டரியுடன் 44 ரன்களை எடுத்திருந்த விஜய் சங்கா் எதிா்பாராத விதமாக ரன் அவுட்டானாா்.

விஜய் சங்கா் 44:

இறுதியில் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது தமிழகம். அஸ்வின் 16 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

கா்நாடகத் தரப்பில் ரோனித் மோரே 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இதையடுத்து ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது கா்நாடகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com