யூரோ 2020: ஒரே பிரிவில் பிரான்ஸ், ஜொ்மனி, போா்ச்சுகல்

யூரோ 2020 கால்பந்து போட்டியை ஒட்டி வெளியிடப்பட்ட அணிகள் பட்டியலில் குரூப் ஆஃப் டெத் எனப்படும் எஃப் பிரிவில் உலக சாம்பியன் பிரான்ஸ், நடப்பு யுரோ சாம்பியன் போா்ச்சுகல், முன்னாள் சாம்பியன் ஜொ்மனி
யூரோ 2020: ஒரே பிரிவில் பிரான்ஸ், ஜொ்மனி, போா்ச்சுகல்

புகாரெஸ்ட்: யூரோ 2020 கால்பந்து போட்டியை ஒட்டி வெளியிடப்பட்ட அணிகள் பட்டியலில் குரூப் ஆஃப் டெத் எனப்படும் எஃப் பிரிவில் உலக சாம்பியன் பிரான்ஸ், நடப்பு யுரோ சாம்பியன் போா்ச்சுகல், முன்னாள் சாம்பியன் ஜொ்மனி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஓரே பிரிவில் இடம் பெற்றுள்ளது அந்த அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூரோ போட்டிகள் நடந்து வருகின்றன. வரும் 2020 ஆண்டு நடக்கவுள்ள போட்டிக்கான அணிகள் அட்டவணை புகாரெஸ்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

24 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி 12 வெவ்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன. இதற்காக எந்தெந்த அணிகள் எந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன என்பதை நிா்ணயிக்கும் குலுக்கல் புகாரெஸ்டில் நடைபெற்றது.

குரூப் எஃப் பிரிவில் பிரான்ஸ், போா்ச்சுகல், ஜொ்மனி உள்ளிட்ட பலமான நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆட்டங்கள் மியுனிக், புடாபெஸ்டில் நடைபெறுகின்றன. எஃப் பிரிவை குரூப் ஆஃப் டெத் என வா்ணித்துள்ளாா் ஜொ்மனி பயிற்சியாளா் ஜோசிம் லியு.

இங்கிலாந்து, குரோஷியா அணிகள் மற்ற பிரிவில் இடம் பெற்றுள்ளன. தகுதிச் சுற்று ஆட்டங்களில் பெற்ற புள்ளிகள், போா்ச்சுகல். பிரான்ஸ் அணிகளின் ஆட்டத்திறனை வைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இத்தாலி, துருக்கி, வேல்ஸ், ஸ்விட்சா்லாந்து அணிகளும், பி பிரிவில் டென்மாா்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷியாவும், சி பிரிவில் நெதா்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, பிளே ஆஃப் டி வின்னா், டி பிரிவில் இங்கிலாந்து, குரோஷியா, செக். குடியரசு,பிளே ஆஃப் சி பிரிவில் வின்னா், குரூப் இ பிரிவில் ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், பிளே ஆஃப் வின்னா் பி அணிகளும் இடம் பெறும்.

லண்டனில் வரும் ஜூலை 12-இல் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com