சிறந்த கால்பந்து வீரருக்கான பேலன் தோர் விருதை மீண்டும் வென்றார் மெஸ்ஸி!

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் விருதையும் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். 
சிறந்த கால்பந்து வீரருக்கான பேலன் தோர் விருதை மீண்டும் வென்றார் மெஸ்ஸி!

கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பின் (பிஃபா) சிறந்த விளையாட்டு வீரர் விருதை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்தார் 32 வயது லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில், சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் விருதையும் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். 

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.

தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக பேலன் தோர் விருதை ரொனால்டோவும், மெஸ்ஸியும் போட்டிபோட்டு வென்றார்கள். கடந்த வருடம் அதை மாற்றினார் மொட்ரிக். ரொனால்டோ,மெஸ்ஸியின் 10 ஆண்டுக்கால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2018-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது குரோஸிய வீரர் லுகா மொட்ரிக்குக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் இந்த விருதை மீண்டும் வென்றுள்ளார் மெஸ்ஸி.

இதற்கு முன்பு,  பேலன் தோர் விருதைக் கடைசியாக 2015-ல் பெற்றார் மெஸ்ஸி. மொத்தமாக 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார். 2018-19 சீஸனில் தனது நாட்டுக்காகவும் கிளப்புக்காகவும் 54 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com