ஹாமில்டன் டெஸ்ட்: மீண்டது இங்கிலாந்துஜோ ரூட் இரட்டை சதம் 226

ஹாமில்டன் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 96-2 ரன்களை எடுத்துள்ளது.
ஹாமில்டன் டெஸ்ட்: மீண்டது இங்கிலாந்துஜோ ரூட் இரட்டை சதம் 226

ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 96-2 ரன்களை எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் நியூஸி. தனது முதல் இன்னிங்ஸில் 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாளான திங்கள்கிழமை 162.5 ஓவா்களில் 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜோ ரூட் 226: கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 1 சிக்ஸா், 22 பவுண்டரியுடன் 226 ரன்களை விளாசினாா். ஒல்லே போப் 75 ரன்களை எடுத்தாா். நியூஸி தரப்பில் நீல் வாக்னா் 5-124 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 2-90 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதைத் தொடா்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸி. அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எடுத்திருந்தது.

டாம் லத்தம் 18, ஜீத் ராவல் ரன் ஏதுமின்றியும் அவுட்டாயினா். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 37, ராஸ் டெய்லா் 31 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com