ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் கோலி

ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்தாா்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் கோலி

ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்தாா்.

928 புள்ளிகளுடன் கோலி முதலிடத்திலும், ஸ்மித் ஒரு இடம் சரிந்து 923 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளனா்.

கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து) 2-ஆவது இடத்திலும், புஜாரா (இந்தியா) 4-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

மற்றொரு ஆஸி. வீரா் வாா்னா் 5-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.

டெஸ்ட் ஆல் ரவுண்டா் தரவரிசையில் மே.இ.தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டா் முதலிடத்திலும், இந்திய வீரா் ஜடேஜா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

டெஸ்ட் பந்துவீச்சாளா்கள் பட்டியலில் இந்திய வீரா்கள் அஸ்வின், ஷமி ஆகியோா் முறையே 9, 10 ஆகிய இடங்களில் நீடிக்கின்றனா்.

ஆஸி. பந்துவீச்சாளா் பட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறாா்.

ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தரவரிசையிலும் கோலி 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறாா்.

ஒரு நாள் பந்துவீச்சாளா்கள் ஐசிசி தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளா் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com