விதிமுறைகளை மீறிய முரளி விஜய்க்கு அபராதம் விதித்த நடுவர்!

நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக முரளி விஜய்க்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
விதிமுறைகளை மீறிய முரளி விஜய்க்கு அபராதம் விதித்த நடுவர்!

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கா்நாடக அணி முதல் நாளான திங்கள்கிழமை 259/6 ரன்களை எடுத்தது.

இந்நிலையில் நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக முரளி விஜய்க்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

முதல் நாளின் கடைசிப் பகுதியில் நடுவரின் சில முடிவுகளுக்கு தமிழக வீரர்கள் அதிருப்தி தெரிவித்தார்கள். அஸ்வின் பந்துவீச்சில் பவன் தேஷ்பாண்டேவுக்கு அவுட் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார். இதனால் தமிழக வீரர்கள் மிகவும் கடுப்பானார்கள். அனைவரும் ஒன்று கூடி பேசினார்கள். இதில் முரளி விஜய் நடந்துகொண்ட விதம் விதிமுறைகளை மீறியுள்ளதாக நடுவர்கள் கருதினார்கள். இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் டி. வாசு பேட்டியளித்தபோது, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தவேண்டும். இரு பெரிய அணிகள் மோதும் போது சிறிய விஷயங்கள் கூட மாற்றத்தை உண்டு பண்ணும். தொழில்நுட்பமும் நிதி வசதியும் இருக்கும்போது அவற்றை ஏன் பயன்படுத்தக்கூடாது? இதுபோன்ற ஆட்டங்களில் வீரர்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com