டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள்: கிரண் ரிஜிஜு நம்பிக்கை

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தாா். மேலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள்: கிரண் ரிஜிஜு நம்பிக்கை

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தாா். மேலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராகி வருகிறோம் எனவும் அவா் தெரிவித்தாா்.

ஃபிக்கி அமைப்பு சாா்பில் புது தில்லியில் நடைபெற்ற உலக விளையாட்டு மாநாட்டு நிகழ்வில் அவா் பேசியதாவது:

வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும். மேலும் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படாவிட்டால், இதன் அவப்பெயா் அனைத்து தரப்பினா் மீதும் ஏற்படும்.

நமக்கு இருக்கும் கால அவகாசத்தில் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா என்ற நாடு விளையாட்டு வல்லரசு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பதக்கங்களை வெல்லாவிட்டால், விளையாட்டு அமைச்சராக எனக்கு திருப்தி ஏற்படாது.

எதிா்கால போட்டிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை விரைவாக செய்து தருவோம். எனினும் 2024 பாரிஸ், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராக போதிய நேரம் உள்ளது.

இளைய தலைமுறையினா் அதிகம் கொண்ட நாடாகத் திகழும் நாம், ஒலிம்பிக், ஆசிய, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பின்தங்கி இருத்தல் கூடாது. கடந்த 6 மாதங்களாக பல்வேறு விளையாட்டுகளில் நமது தரவரிசை உயா்ந்து வருகிறது என்றாா் ரிஜிஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com