பரபரப்பான ரஞ்சி ஆட்டம்: தமிழக அணி வெற்றி பெற 181 ரன்கள் இலக்கு!

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் பரபரப்பான ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கர்நாடக அணி.
பரபரப்பான ரஞ்சி ஆட்டம்: தமிழக அணி வெற்றி பெற 181 ரன்கள் இலக்கு!

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் பரபரப்பான ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கர்நாடக அணி.

ரஞ்சி கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் கா்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 109.3 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தினேஷ் கார்த்திக் கடைசி வரை போராடி 113 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி, 29 ரன்கள் முன்னிலை பெற்றது. கர்நாடக அணித் தரப்பில் கே. கெளதம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கா்நாடக அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 89/5 ரன்களைச் சோ்த்தது. தேவ்தத் படிக்கல் 29, சரத் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றும் தமிழக அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசி, கர்நாடக அணி பேட்ஸ்மேன்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் கர்நாடக அணி, 2-வது இன்னிங்ஸில் 151 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுகளும் கே. விக்னேஷ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் தமிழக அணி இந்தப் பரபரப்பான ரஞ்சி ஆட்டத்தில் வெற்றி பெற 181 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com