ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களின் பட்டியல்!

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாக...
ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். இந்நிலையில் அணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப வீரர்களின் பட்டியல் தற்போது 332 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 332 வீரர்களில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 19 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த 332 வீரர்களிலிருந்து 73 வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்யவுள்ளன. இந்த 73 வீரர்களில் 29 வீரர்கள், வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

ஐபிஎல் ஏலமும் தமிழக வீரர்களும்

சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழக வீரர்கள் அசத்தினார்கள். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை: அதிக விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர்கள்

சாய் கிஷோர் - 20 விக்கெட்டுகள், எகானமி - 4.63. (அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடம்)
டி. நடராஜன் - 13 விக்கெட்டுகள், எகானமி - 5.84
எம். சித்தார்த் - 12 விக்கெட்டுகள், எகானமி - 4.94 ( 5 ஆட்டங்களில் இத்தனை விக்கெட்டுகளை எடுத்து கவனம் ஈர்த்துள்ளார்.)

இந்த மூவரில் நடராஜன், ஏற்கெனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் 23 வயது சாய் கிஷோர், 21 வயது சித்தார்த் ஆகிய இருவரும் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2020 போட்டிக்கான அணிகளில் பங்குபெற்றுள்ள தமிழக வீரர்கள் 

1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்

ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெறவுள்ள 10 தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம் 
5. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
7. மணிகண்டன் - ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம் 
9. முகமது - ரூ. 20 லட்சம் 
10. அபினவ் - ரூ. 20 லட்சம்

கடந்த வருடம் என்ன ஆனது?

2019 ஐபிஎல் போட்டியில் ஆர். அஸ்வின், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், முரளி விஜய், நடராஜன், ஜெகதீசன், எம். அஸ்வின் ஆகிய 9 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள்.

2019 ஐபிஎல்-லில் விளையாடிய தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - பஞ்சாப் - ரூ. 8.40 கோடி

2. ஆர். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 7.60 கோடி
3. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி  
4. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி 
5. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி 
6. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி 
7. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம் 
8. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்

9. எம். அஸ்வின் - ரூ. 20 லட்சம்

2019 ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களும் அவர்களுடைய அடிப்படைத் தொகைகளும்

1. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம்
2. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம்
3. அனிருதா ஸ்ரீகாந்த் - ரூ. 30 லட்சம்
4. எம். அஸ்வின் முருகன் - ரூ. 20 லட்சம்
5. சி.வி. வருண் சக்கரவர்த்தி - ரூ. 20 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம்
8. ஆர். சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
9. கே. விக்னேஷ்  - ரூ. 30 லட்சம்.

இவர்களில் ஜாக்பாட் அடித்தவர், வருண் சக்கரவர்த்தி. அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்றபோதும் இறுதியில் அவரை ரூ. 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. அதேபோல முருகன் அஸ்வினையும் அவருடைய அடிப்படை விலைக்கு பஞ்சாப் தேர்வு செய்தது. மற்றபடி மீதமிருந்த ஏழு தமிழக வீரர்களையும் ஏலத்தில் எந்த அணியும் சீந்தவில்லை. இதனால் பாபா இந்திரஜித், பாபா அபராஜித், அனிருதா ஸ்ரீகாந்த், சாய் கிஷோர், ஆர். விவேக், ஆர். சஞ்சய் யாதவ், கே. விக்னேஷ் ஆகியோருக்கு 2019 ஐபிஎல்-லில் இடம் கிடைக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com