சென்னை ஒருநாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா?: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

தனியார் வானிலை ஆய்வாளர், தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில்...
சென்னை ஒருநாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா?: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, உள் தமிழகத்தின் சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. 

இந்நிலையில் சென்னை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஒருநாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர், தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ஞாயிறன்று சென்னையில் மழை பெய்யாது என்று கூறியுள்ளார். அவர் தன்னுடைய பதிவுகளில் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:

சனியன்று மதியம் வரை சென்னையில் மழை பெய்யும். அதன்பிறகு டிசம்பர் 16 அன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் லேசாக மழை பெய்யும். 

டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ள சென்னை கிரிக்கெட் ஆட்டத்துக்கு ஒன்றும் ஆகாது. திட்டமிட்டபடி ஆட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com