ஜடேஜா ரன் அவுட் ஆன விதம்: கோலி எதிர்ப்பு! (விடியோ)

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் ஜடேஜா ரன் அவுட் ஆன விதம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.
ஜடேஜா ரன் அவுட் ஆன விதம்: கோலி எதிர்ப்பு! (விடியோ)

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் ஜடேஜா ரன் அவுட் ஆன விதம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயா், ஷாய் ஹோப் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் மே.இ.தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் சென்னையில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களைக் குவித்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும் ஷ்ரேயஸ் ஐயா்-ரிஷப் பந்தின் ஆட்டத்தால், சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி. பின்னா் ஆடிய மே.இ.தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களுடன் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இன்னிங்ஸின் கடைசிப் பகுதியில் ஜடேஜா, 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஜடேஜா ரன் எடுக்க முயன்றபோது, ராஸ்டன் சேஸ், ரன் அவுட் செய்ய முயன்று பந்தால் ஸ்டம்புகளை வீழ்த்தினார். முதலில் பார்க்கும்போது அது ரன் அவுட் இல்லை என்பதுபோலத் தான் தெரிந்தது. எனவே நடுவர் ஷான் ஜார்ஜ் அவுட் தரவில்லை. ஆனால் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டபோது ஜடேஜா ரன் அவுட் ஆனது நன்குத் தெரிந்தது. இதனால் நடுவரிடம் கேப்டன் பொலார்ட் முறையீடு செய்தார். இதையடுத்து மூன்றாம் நடுவரிடம் இந்த விவகாரம் சென்றது. முடிவில், ஜடேனா ரன் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. 

மைதானத்தில் எல்லைக் கோட்டின் அருகே இந்நிகழ்வைக் கண்ட கேப்டன் கோலி மிகவும் கோபமடைந்தார். இது சரியல்ல என்பது போல தனது அதிருப்தியைத் தெரிவிக்கும் விதத்தில் அவருடைய உடல் மொழி இருந்தது. 

ஆட்டம் முடிந்த பிறகு இதுகுறித்து கோலி கூறியதாவது: விஷயம் மிக எளிமையானது. அது அவுட்டா என ஃபீல்டர் கேள்வி எழுப்பினார். இல்லை எனப் பதில் அளித்தார் நடுவர். அத்துடன் இந்த விஷயம் நிறைவுபெற்றது. வெளியே டிவியின் முன்னாள் அமர்ந்திருப்பவர்கள், நடுவரிடம் மீண்டும் முறையிடச் சொல்லும்படி ஃபீல்டர்களுக்குச் சொல்லக்கூடாது. 

விதிமுறைகள் எங்கே போயின? இதற்கான எல்லைக்கோடு எதுவரை உள்ளது? நடுவர்களும் ஆட்ட நடுவரும் இந்தச் சம்பவத்தை மீண்டும் பார்த்து, என்ன செய்யவேண்டும் என்ன அலசவேண்டும். ஆடுகளத்துக்கு வெளியே உள்ளவர்கள், உள்ளே என்ன நடக்கவேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடாது. அதுதான் தற்போது நடந்துள்ளது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com