கடந்த பத்தாண்டுகளில் விராட் கோலி நிகழ்த்தியுள்ள சாதனைகள்: மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

பத்து வருடங்களாக, ஒரு வீரர் எப்படித் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும்...
கடந்த பத்தாண்டுகளில் விராட் கோலி நிகழ்த்தியுள்ள சாதனைகள்: மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

2010 முதல் 2019 வரையிலான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.

பத்து வருடங்களாக, ஒரு வீரர் எப்படித் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும்? அதிலும் கோலி, இந்திய அணியின் கேப்டனாக வேறு கூடுதல் பொறுப்புகளைச் சுமக்கிறார்.  

கிரிக்கெட் செய்தியாளர் பரத் சீர்வி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கோலியின் மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள் இவை: 

இந்த தசாப்தத்தில் (2010-2019) ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 

- அதிக ஆட்டங்கள் (227) 
- அதிக ரன்கள் (11125)
- அதிக சதங்கள் (42) 
- அதிக அரை சதங்கள் (52) 
- அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (35)
- அதிக தொடர் நாயகன் விருதுகள் (7)
- அதிக பவுண்டரிகள் (1038) 
- ஃபீல்டராக அதிக கேட்சுகள் (117)

கடந்த பத்தாண்டுகளில், அதிக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் 

227 - விராட் கோலி
196 - தோனி
196 - மேத்யூஸ்
195 - இயன் மார்கன் 
180 - ரோஹித் சர்மா

கடந்த பத்தாண்டுகளில் அதிக ஒருநாள் ரன்கள் 

11125 - விராட் கோலி (சராசரி 60.79)
8249 - ரோஹித் சர்மா (53.56)
7265 - ஆம்லா (49.76)
6485 - டி வில்லியர்ஸ் (64.20)
6428 - ராஸ் டெய்லர் (54.01)

கடந்த பத்தாண்டுகளில், அதிக ஒருநாள் ஆட்ட நாயகன் விருதுகள் 

35 - விராட் கோலி
21 - மார்டின் கப்தில் 
20 - டி வில்லியர்ஸ்
20 - ரோஹித் சர்மா
19 - தில்ஷன்

கடந்த பத்தாண்டுகளில், அதிக ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் 

7 - விராட் கோலி
6 - ஆம்லா
5 - ரோஹித் சர்மா, வில்லியம்சன்

கடந்த பத்தாண்டுகளில், அதிக கேட்சுகள் பிடித்த ஃபீல்டர்கள் 

117 - விராட் கோலி
87 - ராஸ் டெய்லர்
81 - டு பிளெஸ்ஸி
79 - மார்டின் கப்தில்
77 - ஆம்லா

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அதிக ஒருநாள் ரன்கள் குவித்தவர்கள்

1970 - 79: கிரேக் சேப்பல் (919 ரன்கள்)
1980 - 89: டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (5892)
1990 - 99: சச்சின் டெண்டுல்கர் (8571)
2000 - 2009: ரிக்கி பாண்டிங் (9103)
2010 - 2019: விராட் கோலி (11125)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com