உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்: ஆறுதல் வெற்றியடைந்த நியூஸிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தை வென்றுள்ளது நியூஸிலாந்து மகளிர் அணி.
உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்: ஆறுதல் வெற்றியடைந்த நியூஸிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தை வென்றுள்ளது நியூஸிலாந்து மகளிர் அணி.

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார். ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், 20 வருடங்களாக விளையாடி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி 44 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 200-வது ஒருநாள் ஆட்டத்தை விளையாடிய மிதாலி ராஜ், 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 52 ரன்கள் எடுத்தார். நியூஸி. அணியின் அன்னா பேட்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த இலக்கை 29.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களுடன் அடைந்து வெற்றி பெற்றது நியூஸிலாந்து மகளிர் அணி. பேட்ஸ் 57 ரன்களும் சாட்டர்த்வெயிட் 66 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.

3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com