ஹாக்கி: பிரான்ஸை வீழ்த்தியது இந்தியா

பிரான்ஸ்  மகளிர் ஏ அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா ஏ அணி வென்றது.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய ஏ அணியினர்.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய ஏ அணியினர்.


பிரான்ஸ்  மகளிர் ஏ அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா ஏ அணி வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் தொடர் லக்னெளவில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸும், இரண்டாம் ஆட்டத்தில் இந்தியாவும் வென்றன.
மூன்றாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முழுமையாக இந்திய ஏ அணி ஆதிக்கம் செலுத்தியது. மும்தாஸ் கான், ஷர்மிளா தேவி கோலடித்தனர். இறுதியில் 2-0 என வென்றது இந்தியா.
இதன் மூலம் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com