சாம்பியன்ஸ் லீக்-ரவுண்ட் 16: டாட்டன்ஹாம் அபார வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக லண்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ரவுண்ட் 16 சுற்று ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணி 3-0 என்ற கோல்கணக்கில் டார்ட்மண்டை வீழ்த்தியது.
கோலடித்த மகிழ்ச்சியில் டாட்டன்ஹாம் அணியினர்.
கோலடித்த மகிழ்ச்சியில் டாட்டன்ஹாம் அணியினர்.


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக லண்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ரவுண்ட் 16 சுற்று ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணி 3-0 என்ற கோல்கணக்கில் டார்ட்மண்டை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்தின் முக்கிய போட்டிகளில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் 16 ஆட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாட்டன்ஹாம் டிபண்டர் வெர்டோன்ஜென் முதல் கோலை அடித்தார். இரண்டாம் கோலை சன் ஹியுங் மின் பெற்றுத் தந்தார். பதிலி வீரர் பெர்னான்டோ லோரன்டெ மூன்றாவது கோலை அடித்தார்.
டாட்டன்ஹாம் அபார ஆட்டத்துக்கு முன்பு டார்ட்மண்ட் அணியால் பதிலளிக்க முடியவில்லை.  
வார் தொழில்நுட்ப உதவியால் ரியல் மாட்ரிட் வெற்றி:
ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற அஜாக்ஸ்-ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விடியோ உதவி நடுவர் வார் தொழில்நுட்பத்தால் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.
24 ஆண்டுகளில் ஒருமுறை கூட மாட்ரிட் அணியை வெல்லாத அஜாக்ஸ் அணி இதில் வெல்லும் தீவிரத்துடன் போராடியது. எனினும் ரியல் அணியின் கரீம் பென்ஸாமா 60-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். பின்னர் அஜாக்ஸ் வீரர் ஹக்கீம் தனது அணியின் முதல் கோலை அடித்து 1-1 என சமநிலை ஏற்படச்செய்தார். 
பின்னர் அஜாக்ஸ் வீரர் டுஸான் டேடிக் கோலடித்தார். ஆனால் அது வார் தொழில்நுட்ப முடிவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் டுஸான் அடித்த கோல் ஆஃப் சைட் எனத் தெரிந்ததால், நிராகரிக்கப்பட்டது. பின்னர் 87-ஆவது நிமிடத்தில் மார்கோ அசென்சியோ அடித்த கோலால் 2-1 என வென்றது மாட்ரிட்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் முதன்முறையாக வார் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com