விஜய் சங்கரை மெச்சிய தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்!

பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பங்களிப்பதால் அவரால் இரட்டைப் பலன்கள் கிடைக்கின்றன.
விஜய் சங்கரை மெச்சிய தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுகமாக சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே இடம் பெற்றுள்ளார். ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவில் 2 டி20, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸி. அணி ஆடுகிறது. 

இந்நிலையில் அணித் தேர்வு குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத், தமிழக வீரர் விஜய் சங்கரை மிகவும் பாராட்டிப் பேசினார். அவர் கூறியதாவது:

சமீபத்தில் தொடர்களில் விஜய் சங்கர் விளையாடிய விதம் அணியின் வடிவத்தை மாற்றியுள்ளது. பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பங்களிப்பதால் அவரால் இரட்டைப் பலன்கள் கிடைக்கின்றன. அவருடைய ஆட்டத்திறனை அடுத்தச் சில ஆட்டங்களிலும் மதிப்பீடு செய்வோம் என்று கூறியுள்ளார்.      

விராட் கோலி அணியில் விளையாடாத நிலையில் மூன்றாம்  நிலை வீரராகக் களமிறங்கி சிறப்பாக விளையாடியதால் உலகக் கோப்பைக்கான அணியில் விஜய் சங்கர் நிச்சயம் இடம்பெறுவார் என்று அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com