துளிகள்...


    திருவனந்தபுரத்தில் புதன்கிழமை தொடங்கிய தென்னாப்பிரிக்க 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான முதல் யூத் டெஸ்ட் ஆட்டத்தில் அந்த அணியை 197 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது இந்தியா. சுழற்பந்துவீச்சாளர் ஹிரித்திக் ஷோகீன் 4-50 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் ஆடிய இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி 95/3 ரன்களை சேர்த்துள்ளது.


    புல்வாமா தாக்குதல் எதிரொலியாக நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் அகற்றப்பட்டன. இம்ரான் கான், ஜாவேத் மியான்டட், உள்பட பலரின் படங்கள் நீக்கப்பட்டன என சங்க தலைவர் ஆனந்த் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.


    ஜெர்மனி மற்றும் டச்சு சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 20 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணியை பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. டச்சு போட்டி பிப். 27 முதல் மார்ச் 3 வரையும், ஜெர்மன் போட்டி மார்ச் 7 முதல் 10 வரையும் நடக்கவுள்ளது.


    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் பட்டியலில் முதலிடம் பெறுவதற்கான முயற்சியில் எப்ஃசி பெங்களூரு-எப்ஃசி கோவா அணிகள் பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com