பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இதுவே தருணம்: யுஜவேந்திர சஹல்

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இதுவே உரிய தருணம் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இதுவே தருணம்: யுஜவேந்திர சஹல்


புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இதுவே உரிய தருணம் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 42 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கிரிக்கெட் வீரர்கள் கொதிப்புடன் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சஹல் புதன்கிழமை கூறியதாவது: புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடூரமானது. இதில் வீரர்கள் உயிரிழப்பு மிகவும் வேதனை தந்தது. இதுபோன்ற தாக்குதல் தொடராமல் தடுக்க பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்ட இதுவே தருணமாகும். பயங்கரவாதத்தை ஓரேடியாக களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்களும் நமது ராணுவ வீரர்கள் தாக்குதல்களில் உயிரிழப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செயல்கள் தொடர்வதை வேடிக்கை பார்க்க முடியாது. 
பாக்.குடன் ஆடுவது குறித்து பிசிசிஐ தீர்மானிக்கும்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் ஜூன் 16இல் ஓல்ட் டிராஃபோர்டில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆட வேண்டியுள்ளது. புல்வாமா எதிரொலியாக இந்திய அணி ஆடுவது குறித்து பிசிசிஐ தான் முடிவெடுக்கும் என்றார்.
முன்னாள் ஓபனர் சேதன் செளஹான் கூறியதாவது: புல்வாமா தாக்குதல் குறித்து விளக்கி, உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற ஐசிசியிடம் புகார் தெரிவிக்க வேண்டும். ஒரு ஆட்டம் மட்டுமின்றி அரையிறுதி, இறுதி ஆட்டத்திலும் நாம் ஆட வேண்டியிருக்கலாம். பாகிஸ்தான் இல்லாமல் உலகக் கோப்பை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என நம்பலாம் என்றார் செளஹான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com