ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா:  இன்று முதல் டி20 கிரிக்கெட்

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா:  இன்று முதல் டி20 கிரிக்கெட்

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
2 டி20 ஆட்டங்கள், 5 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலியா. முதல் டி20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இந்திய அணி அண்மையில் சாதனை படைத்தது.
உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு இந்திய அணி விளையாடவுள்ள கடைசி சர்வதேச தொடராக இந்த டி20 ஆட்டமும், ஒரு நாள் ஆட்டமும் அமையவுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 ஒரு நாள் தொடரின் கடைசி 2 ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. 3 வார ஓய்வுக்கு பிறகு தற்போது அவரது தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவனும், ரோஹித் சர்மாவும் நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளனர்.
ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 
தோனி, விஜய் சங்கர், ரிஷப் பந்த், க்ருணால் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பலம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
21 வயது இளம் வீரரான மயங்க் மார்கண்டே அணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்தார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா, யுவேந்திர சஹல், உமேஷ் யாதவ் என இளம் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்க உள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலுவாகத் திகழ்கிறது.
கடைசியாக இரு அணிகளும் விளையாடிய டி 20 தொடர் சமன் ஆனது.
ஒரு நாள் தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதால் இந்தத் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸி. விளையாடும்.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன், டி20, ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com