இன்று புரோகபடி லீக் இறுதிப் போட்டி: வெல்லப்போவது பெங்களூரா? குஜராத்தா?

புரோகபடி லீக் போட்டி இறுதிச் சுற்றில் வெல்லப்போவது பெங்களூரு புல்ஸ் அணியா அல்லது குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று புரோகபடி லீக் இறுதிப் போட்டி: வெல்லப்போவது பெங்களூரா? குஜராத்தா?


புரோகபடி லீக் போட்டி இறுதிச் சுற்றில் வெல்லப்போவது பெங்களூரு புல்ஸ் அணியா அல்லது குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய புரோகபடி லீக் 6-ஆவது சீசன் தற்போது இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மும்பை வொர்லியில் சனிக்கிழமை நடக்கிறது.
ஏற்கெனவே இரு அணிகளும் 3 முறை மோதியதில் 2 அணிகளும் தலா ஒரு முறை வென்றன. 1 ஆட்டம் டிராவில் முடிந்தது. 
இதற்கிடையே குவாலிஃபையர் ஆட்டத்தில் பெங்களூரு அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றது. இரண்டாம் குவாலிஃபையரில் யுபி யோத்தா அணியை வென்று குஜராத் இறுதிக்குள் நுழைந்தது.
முதன்முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள குஜராத் அணியில் பிரபஞ்சன், பர்வேஷ் பனிஸ்வால், கேப்டன் சுனில்குமார், ரோஹித் குலியா அபாரமாக ஆடி வருகின்றனர். அதே நேரத்தில் பெங்களூரு அணியில் பவன்குமார், கேப்டன் ரோஹித்குமார், ஆகியோர் சிறப்பா ஆடிவருகின்றனர். 
ரூ.3 கோடி பரிசுத் தொகை:
இறுதிச் சுற்றில் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் ரொக்கப் பரிசாக தரப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com