பூம்ராவுக்கு ஒரு மாத ஓய்வு: பிசிசிஐ அறிவிப்பு

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு...
பூம்ராவுக்கு ஒரு மாத ஓய்வு: பிசிசிஐ அறிவிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. அடுத்ததாக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 12 முதல் தொடங்குகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வருகை தந்து 5 ஒருநாள், 3 டி20-யில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் பூம்ரா நல்ல உடற்தகுதியுடன் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முஹமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு சித்தார்த் கெளலும் தேர்வாகியுள்ளார். நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம் பிப்ரவரி 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com