சுடச்சுட

  

  ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் விடை பெறுகிறார் ஆண்டி முர்ரே!

  By எழில்  |   Published on : 11th January 2019 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  murray_ausopen1_2019

   

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரிஸ்பேன் இன்டர்னேஷனல் டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். காயத்திலிருந்து மீண்டு களம் கண்ட அவரை, ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோற்கடித்தார். இந்நிலையில் இந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக முர்ரே திடீரென அறிவித்துள்ளார். 

  31 வயது ஆண்டி முர்ரே, சமீபகாலமாக இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தன்னால் தொடர்ந்து விளையாடுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் தன்னுடைய ஓய்வுக்கு இந்தக் காயமே காரணமெனக் கூறியுள்ளார். விம்பிள்டன் போட்டி வரை விளையாடி ஓய்வு பெறுவதே தன் விருப்பம். ஆனால் அதுவரை விளையாடமுடியுமா எனத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  பிக் ஃபோர் என்று சொல்லக்கூடிய கூட்டணியான ஃபெடரர், ஜோகோவிச், நடால் ஆகியோருடன் இணைந்து பேசப்பட்டவர் முர்ரே. ஆனால் அவருடைய சர்வதேசத் தரவரிசை தற்போது 230-க்கு இறங்கியுள்ளது. 2016-ல் இரண்டாவது விம்பிள்டன் பட்டத்தை வென்றபிறகு அவர் எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், 45 ஏடிபி பட்டங்கள் என சில காலம் முன்னணி வீரராக இருந்து புகழ்பெற்றவர் முர்ரே. 2013-ல், கடந்த 77 வருடங்களில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பிரிட்டிஷ் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார். 2016-ல் நெ.1 வீரராகவும் முன்னேறியுள்ளார். 

  மெல்போர்னில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடும்போது துக்கம் தாங்காமல், பேசமுடியாமல் தவித்தார் முர்ரே. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai