சுடச்சுட

  

  தோனி போன்ற ஒரு வீரர் 30-40 வருடங்களுக்கு ஒருமுறை தான் கிடைப்பார்: ரவி சாஸ்திரி பாராட்டு!

  By எழில்  |   Published on : 19th January 2019 04:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni_smile1222

   

  ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக தலா 2-1 என  டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இந்திய அணி  அபார சாதனை படைத்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதி மற்றும் 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வென்றது. ஏற்கெனவே இந்தியா-ஆஸி. அணிகள் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரை 71 ஆண்டுக்கால காத்திருப்புக்கு பின் இந்தியா 2-1 எனக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பெற்றது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார். தோனி இத்தொடரில் மூன்று அரை சதங்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரது உடல்தகுதி குறித்து கேள்வி எழுந்த நிலையில் தோனி மிடில் ஆர்டரில் அற்புதமாக ஆடி தனது ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார். இதனால் தொடர் நாயகன் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

  தி டெலிகிராப் ஊடகத்துக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். அதில் தோனி பற்றி அவர் கூறியதாவது: தோனியை யாரும் மாற்றமுடியாது. அவரைப் போன்ற வீரர்கள் 30-40 வருடங்களுக்கு ஒருமுறைதான் கிடைப்பார்கள். இந்தியர்களுக்கு இதைத்தான் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவருடைய ஆட்டத்தை முடிந்தவரை நன்கு அனுபவியுங்கள். கிரிக்கெட்டிலிருந்து தோனி விலகும்போது அவருடைய இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். தோனி மீது அனைவருக்கும் மரியாதை உண்டு. அவர் பத்து வருடங்கள் கேப்டனாக இருந்ததால் அனைத்து வீரர்களும் அவரால் வளர்க்கப்பட்டவர்கள். அவருக்கு அணியின் ஓய்வறையில் கிடைக்கும் மரியாதை மகத்தானது என்று பாராட்டியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai