ஆஸ்​தி​ரே​லிய ஓபன்: அரை​யி​று​தி​யில் நடால், சிட்ஸி​பாஸ், குவிட்​டோவா, காலின்ஸ்

ஆஸ்​தி​ரே​லிய ஓபன் டென்​னிஸ் போட்டி​யின் அரை​யி​று​திச் சுற்​றுக்கு ஆட​வர் பிரி​வில் ரபேல் நடால், ஸ்டெ​பானோ சிட்ஸி​பாஸ், மக​ளிர் பிரி​வில் குவிட்​டோவா, டேனி​யல் காலின்ஸ் ஆகி​யோர் தகுதி
ஆஸ்​தி​ரே​லிய ஓபன்: அரை​யி​று​தி​யில் நடால், சிட்ஸி​பாஸ், குவிட்​டோவா, காலின்ஸ்


ஆஸ்​தி​ரே​லிய ஓபன் டென்​னிஸ் போட்டி​யின் அரை​யி​று​திச் சுற்​றுக்கு ஆட​வர் பிரி​வில் ரபேல் நடால், ஸ்டெ​பானோ சிட்ஸி​பாஸ், மக​ளிர் பிரி​வில் குவிட்​டோவா, டேனி​யல் காலின்ஸ் ஆகி​யோர் தகுதி பெற்​றுள்​ள​னர்.
மெல்​போர்​னில் செவ்​வாய்க்​கி​ழமை காலி​றுதி ஆட்டங்​கள் நடை​பெற்​றன. ஆட​வர் பிரி​வில் நடை​பெற்ற ஆட்டம் ஒன்​றில் உல​கின் இரண்​டாம் நிலை வீர​ர​ரும், 17 முறை கிராண்ட்ஸ்​லாம் பட்டம் வென்​ற​வ​ரு​மான நடா​லும்-​அ​மெ​ரிக்க வீரர் பிரான்​ஸஸ் டியா​போ​வும் மோதி​னர். இதில் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்க​ளில் வென்று அரை​யி​று​திக்கு தகுதி பெற்​றால் நடால்,
மற்​றொரு காலி​று​தி​யில் கிரீஸ் வீரர் சிட்ஸி​பா​ஸும், ஸ்பெ​யி​னின் ராபர்டோ அகுட்​டும் மோதி​னர். நடப்பு சாம்​பி​யன் பெட​ரரை வென்ற உற்​சா​கத்​தோடு கள​மி​றங்​கிய 20 வயது சிட்ஸி​பாஸ் முதல் செட்டை 7-5 என போராடி வென்​றார். அடுத்த செட்டை 6-4 என ராபர்ட்டோ கைப்​பற்​றி​னார். பின்​னர் சுதா​ரித்​துக் கொண்ட சிட்ஸி​பாஸ் 6-4, 7-6 என்ற செட் க​ணக்​கில் வென்று அரை​யி​று​திக்கு தகுதி பெற்​றார்.
கடந்த 2003-இல் ஆண்டி ராடிக்​குக்கு பின் அரை​யி​று​திக்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற சிறப்​பை​யும், முதல் கிரேக்க வீரர் என்ற சிறப்​பை​யும் பெற்​றார் சிட்ஸி​பாஸ். நடாலை அரை​யி​று​தி​யில் எதிர்​கொள்​கி​றார்.
​ம​க​ளிர் பிரிவு: ​ம​க​ளிர் பிரிவு காலி​றுதி ஆட்டம் ஒன்​றில் 8-ஆம் நிலை வீராங்​கனை செக்.​கு​டி​ய​ர​சின் குவிட்​டோவா 6-1, 6-4 என்ற செட் க​ணக்​கில் ஆஸி.​யின் இளம் வீராங்​கனை ஆஷ்லி பர்​டியை வீழ்த்தி அரை​யி​று​திக்கு தகுதி பெற்​றார். கடந்த 2016 டிசம்​பர் மாதம் குவிட்​டோ​வின் கைக​ளில் கத்​தி​யால் திரு​டன் ஒரு​வர் குத்​தி​ய​தால் பலத்த காய​ம​டைந்​தார். கை வி​ரல் நரம்​பு​கள் அறுந்​த​தால், பல மாதங்​கள் குவிட்​டோவா ஆடு​க​ளத்​துக்கு வர​மு​டி​யா​மல் போனது. இரண்டு முறை விம்​பிள்​டன் சாம்​பி​யன் குவிட்​டோவா தற்​போது மீண்​டும் தனது திறனை நிரூ​பித்​துள்​ளார்.
மற்​றொரு காலி​று​தி​யில் தர​வ​ரி​சை​யில் இல்​லாத அமெ​ரிக்க வீராங்​கனை டேனி​யல் காலின்​ஸும், ரஷி​யா​வின் அனஸ்​ட​ஸி​யா​வும் மோதி​னர். இதில் 2-6, 7-5, 6-1 என்ற செட் க​ணக்​கில் வென்று அரை​யி​று​திக்கு முதன்​மு​றை​யாக தகுதி பெற்​றார் காலின்ஸ். நான்​காம் சுற்​றில் அவர் மூன்று முறை சாம்​பி​யன் ஏஞ்​ச​லீக் கெர்​பரை அதிர்ச்​சித் தோல்​வி​ய​டை​யச் செய்​தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com