2015 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக ஒருநாள் வெற்றிகளை அடைந்த இந்திய அணி: சாதிக்கும் கோலியின் படை!

2015 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இதர நாடுகளை விடவும் இந்திய அணியே அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது...
2015 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக ஒருநாள் வெற்றிகளை அடைந்த இந்திய அணி: சாதிக்கும் கோலியின் படை!

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து, மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று நியூஸிலாந்து வந்துள்ள இந்தியா, இங்கும் மகுடம் சூடியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய வெற்றியுடன் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத சக்தியாக உள்ளது. 2015 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இதர நாடுகளை விடவும் இந்திய அணியே அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.  அதன் விவரம்:

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக ஒருநாள் வெற்றிகளை அடைந்த அணிகள்

இந்தியா - 53 ஆட்டங்களில் வெற்றி (வெற்றி சதவிகிதம் 67.09%) 
இங்கிலாந்து - 51 (66.23%)
தென் ஆப்பிரிக்கா -  41 (60.29%) 
நியூஸிலாந்து - 39 (54.93%) 
பாகிஸ்தான் - 35 (50.72%) 
வங்கதேசம்/ஆப்கானிஸ்தான் - 30 (54.55%)
ஆஸ்திரேலியா - 29 (43.94%) 
இலங்கை - 23 (29.11%) 
ஜிம்பாப்வே - 20 (27.03)
அயர்லாந்து - 17 (39.53%) 
மேற்கிந்தியத் தீவுகள் - 15 (26.32%)

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா அடைந்த 53 வெற்றிகள்...

தென் ஆப்பிரிக்கா/நியூஸிலாந்து - தலா 8 வெற்றிகள்
ஆஸ்திரேலியா/இலங்கை - தலா 7 வெற்றிகள்
மேற்கிந்தியத் தீவுகள்/ஜிம்பாப்வே - தலா 6 வெற்றிகள்
வங்கதேசம் - 4 வெற்றிகள்
பாகிஸ்தான்/இங்கிலாந்து - தலா 3 வெற்றிகள்
ஹாங்காங் - 1
(ஆப்கானிஸ்தானுடன் விளையாடிய ஒரே ஒரு ஒருநாள் ஆட்டம் டை-யில் முடிந்தது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com