ஒரு ஐபிஎல் அணியில் கூட நீடிக்காதது வேதனையாக உள்ளது: யுவராஜ் சிங்

இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் ஒரு அணியில் கூட நீடிக்க முடியாதது வேதனை தருகிறது என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஒரு ஐபிஎல் அணியில் கூட நீடிக்காதது வேதனையாக உள்ளது: யுவராஜ் சிங்


இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் ஒரு அணியில் கூட நீடிக்க முடியாதது வேதனை தருகிறது என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா வெல்ல முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் இருந்து கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை பொதுக்குழு கூட்டத்தில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் 6 வெவ்வேறு அணிகளில் இடம் பெற்று ஆடினேன். இதில் 2016 சன்ரைசர்ஸ், 2019 மும்பை இந்தியன்ஸ் வெற்றி அணிகளிலும் இடம் பெற்றிருந்தேன். கடந்த 2014 ஐபிஎல் ஏலத்திலும் அதிக தொகை ரூ.14 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட போதிலும், எந்த அணியிலும் நிலையாக இல்லை. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி அமைந்தது போல் என்னால் நீடிக்க முடியவில்லை. இது வேதனையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நான் புகாராக கூறவில்லை. மும்பை, ஹைதராபாத் அணிகளில் இடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது மறக்க முடியாதது என்றார் யுவராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com