காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 7 தங்கம்

காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆம் நாளான புதன்கிழமை, பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தமாக 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. 


காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆம் நாளான புதன்கிழமை, பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தமாக 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. 
இதில் சீனியர் மகளிர் பிரிவில் ராக்கி ஹால்டர், தேவிந்தர் கெளர் ஆகியோர் தங்கம் வென்றனர். 64 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற ராக்கி ஹால்டர் 214 கிலோ (94+120) எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார். 59 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட தேவிந்தர் கெளர் 184 கிலோ (80+104) எடையைத் தூக்கி தங்கத்தை தனதாக்கினார். 
இதனிடையே, இப்போட்டியின் ஜூனியர் பிரிவில் இந்தியா 5 தங்கப் பதக்கங்கள் வென்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com