டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், பர்டி முதலிடம்

சர்வதேச ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ தரவரிசைப் பட்டியலில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டி ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தில்
டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், பர்டி முதலிடம்


சர்வதேச ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ தரவரிசைப் பட்டியலில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டி ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி முடிவுற்ற நிலையில் சர்வதேச டென்னிஸ் தரவரிசை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 
ஆடவர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், தனது நம்பர் ஒன் நிலையை தக்க வைத்து ஆதிக்கத்தை செலுத்தி உள்ளார்.
முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள், அவர்கள் பெற்ற புள்ளிகள் விவரம்:
ஜோகோவிச் 12, 415 புள்ளிகள், ரபேல் நடால் 7945, ரோஜர் பெடரர் 7460, டொமினிக் தீம் 4595, அலெக்சாண்டர் வெரேவ் 4325, ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4045, கீய் நிஷிகோரி 4040, காரன் கச்சனோவ் 2890, )ஃபேபியோ போகினி 2785, டேனில் மெத்வதேவ் 2625.
டபிள்யுடிஏ மகளிர் தரவரிசை: ஆஷ்லி பர்டி 6605 புள்ளிகள், நவோமி ஓஸாகா 6257, கரோலினா பிளிஸ்கோவா 6055, சிமோனா ஹலேப் 5933, கிகி பெர்டென்ஸ் 5130, பெட்ரா குவிட்டோவா 4785, எலினா விட்டோலினா 4638, ஸ்லோன் ஸ்டீபென்ஸ் 3802, செரீனா வில்லியம்ஸ் 3411, ஆர்யனா சபலென்கா 3365.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com