ஓவர் த்ரோ சர்ச்சை: நடுவர்களின் முடிவை விமர்சிக்க  முடியாது என ஐசிசி பதில்

இங்கிலாந்து-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஓவர் த்ரோவில் கூடுதலாக ஒரு ரன் வழங்கிய சர்ச்சை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி பதில் அளித்துள்ளது.
ஓவர் த்ரோ சர்ச்சை: நடுவர்களின் முடிவை விமர்சிக்க  முடியாது என ஐசிசி பதில்

இங்கிலாந்து-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஓவர் த்ரோவில் கூடுதலாக ஒரு ரன் வழங்கிய சர்ச்சை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி பதில் அளித்துள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதில் ரஷீத்-பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பீல்டிங் செய்த கப்டில் பந்தை வீசுவதற்கு முன்னரே ஓடிச் செல்லவில்லை. ஓவர் த்ரோவாக வீசப்பட்ட பந்து பென் ஸ்டோக்ஸ் கிரீஸை தொட முயன்ற ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து சென்றது.
கப்டில் வீசிய ஓவர் த்ரோவுக்காக 5 ரன்கள் மட்டுமே அளித்திருக்க வேண்டும். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் குமார் தர்மசேனா-மரைஸ் எராஸ்மஸ் ஆகியோர் கடைசி ஓவரின் 3-ஆவது பந்தில் இங்கிலாந்துக்கு 6 ரன்களை கூடுதலாக வழங்கினர். இதனால் மறுபடியும் பென் ஸ்டோக்ஸ் ஆட வாய்ப்பு பெற்றார். இறுதியில் இங்கிலாந்தும் 241 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஓவர் த்ரோவுக்கு கூடுதல் ரன் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
5 முறை ஐசிசி சிறந்த நடுவர் விருதைப் பெற்ற சைமன் டெளஃபெல் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 5 ரன்களுக்கு பதிலாக இங்கிலாந்துக்கு 6 ரன்களை வழங்கி நடுவர்கள் தெளிவாக தவறு புரிந்துள்ளனர் என சாடினார். ஐசிசி விதி 19.8-இன்படி பீல்டர் கையில் இருந்து பந்து வீசப்பட்டால் தான் அதுவும் பேட்ஸ்மேன்கள் கடந்து சென்றால் மட்டுமே கூடுதலாக 1 ரன் வழங்க வேண்டும். ஆனால் இது தவறு என்றார் சைமன்.
இதுதொடர்பாக பதிலளித்துள்ள ஐசிசி, மைதானத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றவாறும் விதிகளின்படியும் நடுவர்கள் முடிவெடுக்கின்றனர். நடுவர்கள் முடிவு குறித்து விமர்சிப்பது என்பது ஐசிசியின் கொள்கைக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com