ஒரு கேப்டனாக இளைஞர்களுக்கு தோனி வாய்ப்பு அளித்தது போல இப்போதும் செய்யுங்கள்: கம்பீர் அறிவுரை!

தோனி கேப்டனாக இருந்தபோது, இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து முடிவுகள் எடுத்தார்...
ஒரு கேப்டனாக இளைஞர்களுக்கு தோனி வாய்ப்பு அளித்தது போல இப்போதும் செய்யுங்கள்: கம்பீர் அறிவுரை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் தோனி இடம்பெறுவாரா மாட்டாரா என்பதுதான் இப்போதைக்கு கிரிக்கெட் ரசிகர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

இதற்கு முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கெளதம் கம்பீர் ஓர் யோசனை கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

எதிர்காலத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். தோனி கேப்டனாக இருந்தபோது, இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து முடிவுகள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் அவர் சொன்னது ஞாபகத்துக்கு உள்ளது, சிபி சீரீஸ் போட்டியில் நான், சச்சின், சேவாக் ஆகிய மூவரும் ஒன்றாக விளையாட முடியாது என்றார். ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரிதாக உள்ளது என்பதால்.

உலகக் கோப்பைப் போட்டியில் இளம் வீரர்கள் இருக்கவேண்டும் என்று விரும்பினார். நடைமுறைக்கு உகந்த முடிவுகளையே எடுக்கவேண்டும். உணர்வுபூர்வமாக இதை அணுகக்கூடாது. இளைஞர்களை வளர்க்கவேண்டிய நேரம் இது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது வேறு விக்கெட் கீப்பர் என யார் இருந்தாலும் திறமையுள்ளவர், விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். திறமையை நிரூபிக்க ஒன்றரை வருடம் வரை அவருக்கு வாய்ப்பளிக்கவேண்டும். 

புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் தோனி சிறந்த கேப்டன் தான். அதனால் இதர கேப்டன்கள் மோசமாகப் பணியாற்றினார்கள் என்று அர்த்தமில்லை. கங்குலியின் தலைமையில் வெளிநாடுகளில் ஜெயித்துள்ளோம். விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளோம். தோனி நமக்கு இரு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால் வெற்றியின்போது எல்லாப் புகழையும் ஒரு கேப்டனுக்கே வழங்கக்கூடாது. அதேபோல தோல்விக்கும் அவரையே குற்றம் சாட்டக்கூடாது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com