அகில இந்திய கூடைப்பந்து: லயோலா, வைஷ்ணவா முதலிடம்

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்குகிறார் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மண்டல மேலாளர் மோகன்ராஜ்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்குகிறார் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மண்டல மேலாளர் மோகன்ராஜ்.


தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் வைஷ்ணவா கல்லூரி அணியும் முதலிடத்தைப் பிடித்தன.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்திய அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மின்னொளி கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 12 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெங்களூரு ஜெயின் கல்லூரி அணியும் மோதின. இதில், 58-40 என்ற புள்ளிக்கணக்கில் லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவில் சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணியும், சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி அணியும் மோதின. இதில், 60-44 என்ற புள்ளிக்கணக்கில் வைஷ்ணவா கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மண்டல மேலாளர் மோகன்ராஜ் கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகக் தலைவர் ராஜ் சத்யன்,  துணைத் தலைவர் பாலன், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவர் பிரம்மானந்தம், செயலர் சுஜேஷ், பொருளாளர் நார்ட்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com