குளுஸ்னரைப் போல் ஆடுகிறார் ஹார்திக்:  ஸ்டீவ் வாக்

தென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் குளுஸ்னரைப் போல் அதிரடியாக ஆடுகிறார் ஹார்திக் பாண்டியா என ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
குளுஸ்னரைப் போல் ஆடுகிறார் ஹார்திக்:  ஸ்டீவ் வாக்


தென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் குளுஸ்னரைப் போல் அதிரடியாக ஆடுகிறார் ஹார்திக் பாண்டியா என ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 27 பந்துகளில் 48 ரன்களை விளாசி, வெற்றிக்கு வித்திட்டார் ஆல்ரவுண்டர் பாண்டியா. இந்நிலையில் அவரது ஆட்டத்தை, கடந்த 1999 உலகக் கோப்பையில் குளுஸ்னர் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் வாக். அவர் ஐசிசி அதிகாரபூர்வ இணையத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாண்டியாவின் அதிரடி ஆட்டம், எதிரணிகளுக்கு முதுகெலும்பில் அச்சத்தை ஏற்படுத்தும். ஒரு இன்னிங்ஸை தொடங்கி, அதிரடியாக முடிப்பதை பாண்டியா அறிவார். அவரது ஷாட்களை தடுக்க எந்த வீரராலும் முடியாது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், குளுஸ்னர் ஸ்ட்ரைக் ரேட் 122.17 உடன் மொத்தம் 281 ரன்களை விளாசினார். அரையிறுதில் எதிர்பாராத வகையில் ஆஸி.யிடம் தோல்வியுற்றது தென்னாப்பிரிக்கா. 
தோனிக்கும் பாராட்டு: 14பந்துகளில் 27 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் 350-ஐ எட்ட உதவினார் தோனி. தேவையான நேரத்தில் அவர் அபாரமாக ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தியாவுடன் தோல்வி கண்டாலும், ஆஸி. அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசைகளில் தேவையான மாற்றங்களை செய்து ஆஸி. தனது இருப்பை வெளிப்படுத்தும் என்றார் வாக்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com