சுடச்சுட

  

  ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: கபில்தேவ் அறிவுரை

  By Raghavendran  |   Published on : 13th June 2019 12:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kapil_on_hardik

   

  ஹார்திக் பாண்டியா சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்க பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கபில்தேவ் கூறியதாவது:

  ஹார்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம். அவரை சுதந்திரமாக விளையாட விடுங்கள். அவருடைய திறமை அசாத்தியமானது என்பதை நான் அறிவேன். எனவே ஹார்திக் என்னை விட பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் ஹார்திக் சிறந்த அணி வீரர் ஆவார்.

  சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்க பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்க வேண்டும். இப்போதைக்கு ஹார்திக்கை என்னால் பேட்டிங் ஆல்-ரவுண்டராக மட்டுமே பார்க்க முடிகிறது. எனவே அவர் தனது பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவரால் முழுமையான ஆல்-ரவுண்டராக உருவாக முடியும். 

  நான் விளையாடிய காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் பாகிஸ்தான் தான் வெற்றிபெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுவார்கள். ஆனால், இப்போதைய சூழலில் பாகிஸ்தானை இந்தியா எளிதில் வீழ்த்திவிடும் என்று நம்புகிறேன்.

  இங்கிலாந்து ஆடுகளங்கள் 80:20 என பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. ரசிகர்கள் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரும்புவது எனக்கு புரிகிறது. ஆனாலும், குறைந்தபட்சம் 60:40 என பந்துவீச்சுக்கு சற்று சாதகமா இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 250 ரன்கள் என்பது குறைந்தபட்ச கடின இலக்காக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai