எஃப்ஐஹெச் சீரிஸ் ஹாக்கி: மெக்ஸிகோ 7-ஆம் இடம்

எஃப்ஐஹெச் சீரிஸ் ஃபைனல்ஸ் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மெக்ஸிகோ 4-3 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை
வெற்றி மகிழ்ச்சியில் மெக்ஸிகோ வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் மெக்ஸிகோ வீரர்கள்.


எஃப்ஐஹெச் சீரிஸ் ஃபைனல்ஸ் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மெக்ஸிகோ 4-3 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. 
இந்த ஆட்டத்துடன், எஃப்ஐஹெச் சீரிஸில் மெக்ஸிகோ 7-ஆவது இடமும், உஸ்பெகிஸ்தான் 8-ஆவது இடமும் பிடித்தன. உலகத் தரவரிசையில் மெக்ஸிகோ 39-ஆவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 43-ஆவது இடத்திலும் உள்ளன. 
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மெக்ஸிகோ சார்பில் மேக்ஸிமிலியானோ மென்டஸ் (29-ஆவது நிமிடம்), அலெக்ஸாண்டர் பால்மா (30-ஆவது நிமிடம்), யாமில் மென்டஸ் (54-ஆவது நிமிடம்), ராபர்டோ கார்சியா (59-ஆவது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். உஸ்பெகிஸ்தான் அணி தரப்பில் கேபுல்லோ காய்ட்போவ் (41-ஆவது நிமிடம்), ஒகுன்ஜோன் மிர்ஸாகரிமோவ் (42-ஆவது நிமிடம்), ரஸ்லான் சட்லிகோவ் (44-ஆவது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். 
ஜப்பான் வெற்றி: இதனிடையே, போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் 6-2 என்ற கோல் கணக்கிலும், ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன. 
ஆட்ட நேரம் மாற்றம்: இந்நிலையில், கடும் வெப்பம் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை நடைபெறக் கூடிய 5-ஆவது இடத்துக்கான ஆட்டத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  காலை 8.45 மணிக்கு தொடங்க இருந்த ஆட்டம், தற்போது 8 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக, கடும் வெப்பம் காரணமாக புதன்கிழமை மெக்ஸிகோ-உஸ்பெகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின்போது ஒவ்வொரு கால்மணி நேர ஆட்டத்துக்குப் பிறகும் வீரர்களுக்கு 2 நிமிடங்களுக்குப் பதிலாக, 4 நிமிட இடைவேளை விடப்பட்டது. 
2-ஆவது பாதி ஆட்டத்தில் ஒவ்வொரு ஏழரை நிமிடங்களுக்கு இடையே ஒரு நிமிடம் வீரர்கள் மற்றும் கள நடுவர் இளைப்பாற இடைவேளை விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com