அரை கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் சாதனை நோக்கத்தில்
கோப்பைகளுடன் நகை வியாபாரி வி. வீரமணி.
கோப்பைகளுடன் நகை வியாபாரி வி. வீரமணி.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் சாதனை நோக்கத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி அரை கிராம் (500 மி.கி) தங்கத்தில் சிறிய அளவிலான உலகக் கோப்பை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியைச் சேர்ந்த நகை வியாபாரி வி. வீரமணி அரை கிராம் தங்கத்தில், அரை இஞ்ச் உயரத்துக்கு உலகக் கோப்பை ஒன்றைத் தயாரித்துள்ளார். அதேபோல, 250 கிராம் வெள்ளியில் 9 இஞ்ச் உயரத்துக்கு ஒரு கோப்பை ஒன்றையும் தயாரித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் மீதான அளவுகடந்த ஆர்வத்தின் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற போதும் 4 கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை ஒன்றைத் தயார் செய்தேன். தற்போது மிகச் சிறிய அளவில் அரை கிராம் தங்கத்தில் உலகக் கோப்பையை தயாரித்துள்ளேன் என்கிறார் வீரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com