அபாரமாக விளையாடும் விராட் கோலி: பெரிய ஸ்கோரை நோக்கி நகரும் இந்திய அணி

விரைவாக ரன்கள் எடுத்து கேப்டன் கோலியையும் இந்திய ரசிகர்களையும் மகிழ்வித்த விஜய் சங்கர் துரதிர்ஷ்டவசமான முறையில்...
அபாரமாக விளையாடும் விராட் கோலி: பெரிய ஸ்கோரை நோக்கி நகரும் இந்திய அணி

டி20 தொடரை 2-0 எனச் சொந்த மண்ணில் இழந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தோனி-ஜாதவ் அதிரடியால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 2-வது ஆட்டம் நாக்பூர் விசிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆஸி. அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள்.

சமீபகாலமாக இந்திய அணிக்கு நல்ல தொடக்க அமைவதில்லை. ரோஹித் சர்மா, தவன் என இருவரில் யாராவது ஒருவர் சீக்கிரம் ஆட்டமிழந்து விடுகிறார்கள். இன்றைக்கு முதல் ஓவரிலேயே ரன் எதுவும் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. கடகடவென 4 பவுண்டரிகள்  அடித்த தவன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் 21 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ராயுடு 18 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தமிழகத்தின் விஜய் சங்கர் களமிறங்கினார்.

அவரும் விராட் கோலியும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். பந்துகளை வீணடிக்காமல் ரன்கள் சேர்த்தார்கள். இதனால் 50 பந்துகளில் இருவரும் 50 ரன்கள் கூட்டணியை அமைதார்கள். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் ரன்கள் எடுத்தார்கள். விராட் கோலி 55 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 50-வது அரை சதம். கடந்த ஏழு ஒருநாள் ஆட்டங்களில் 43 ரன்களுக்குக் குறையாமல் அவர் எடுத்ததில்லை. கடந்த ஏழு இன்னிங்ஸில் ஒரு சதமும் 3 அரை சதங்களும் எடுத்துள்ளார். நான்கு முறை 40களில் ஆட்டமிழந்துள்ளார்.

விரைவாக ரன்கள் எடுத்து கேப்டன் கோலியையும் இந்திய ரசிகர்களையும் மகிழ்வித்த விஜய் சங்கர் துரதிர்ஷ்டவசமான முறையில் ரன் அவுட் ஆனார். ஸம்பா பந்துவீச்சில் கோலி அடித்த ஸ்டிரெய்ட் டிரைவ் ஸம்பாவின் கைகளில் உரசி ஸ்டம்பில் பட்டது. அப்போது கிரிஸுக்கு வெளியே விஜய் சங்கர் இருந்ததால் 46 ரன்களில் எதிர்பாராதவிதமாக வெளியேற வேண்டியிருந்தது. 41 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார் விஜய் சங்கர்.

இந்திய அணி 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 63, ஜாதவ் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com