ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: இன்று தொடக்கம்

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 18 ஆண்டுக்கால பதக்க வேட்கையை பி.வி.சிந்து, சாய்னா ஆகியோர் தீர்த்து வைப்பார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 18 ஆண்டுக்கால பதக்க வேட்கையை பி.வி.சிந்து, சாய்னா ஆகியோர் தீர்த்து வைப்பார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாட்மிண்டனில் பிரதான சர்வதேச போட்டிகளில் ஒன்றான ஆல் இங்கிலாந்து சாம்பியன் போட்டிகள் பர்மிங்ஹாமில் புதன்கிழமை தொடங்குகிறது. 
இறுதியாக கடந்த 2001-இல் இந்தியாவின் கோபிசந்த் பட்டம் வென்றிருந்தார். தற்போது தேசிய தலைமைப் பயிற்சியாளராக உள்ள அவரிடம் சிந்து, சாய்னா ஆகியோர் பயிற்சி பெறுகின்றனர்.
உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசையின்படி முதல் 32 இடங்களில் உள்ளவர்களே இதில் ஆட முடியும். சிந்து, சாய்னா, கே.ஸ்ரீகாந்த் ஆகிய மூவரே தரவரிசையில் உள்ளனர். உலகின் முன்னாள் இரண்டாம் நிலை வீராங்கனை சுங் ஜி ஹியுனுடன் (தென்கொரியா) மோதுகிறார் சிந்து. இருவரும் நேருக்கு நேர் மோதியதில் சுங் ஜி 8 முறையும், சிந்து 6 முறையும் வென்றனர். சிந்து கடந்த 2018-இல் அரையிறுதி வரை முன்னேறினார்.
சாய்னா தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மெளரை எதிர்கொள்கிறார். இதில் சாய்னாவே 6 முறை வென்றுள்ளார். அதே நேரத்தில் சாய்னா கடந்த 2015-இல் இரண்டாம் இடம் பெற்றார்.
ஆடவர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டûஸயும், சமீர் வர்மா முன்னாள் உலக சாம்பியன் விக்டர் ஆக்ஸ்ல்ùஸனை எதிர்கொள்கின்றனர். 
மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, மேக்னா-பூர்விஷா இணைகளும், ஆடவர் பிரிவில் மனு அட்ரி-பி.சுமித்ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com