சுடச்சுட

  
  ganguly1

   

  ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

  இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். 

  இதற்கு முன்பு, தில்லி டேர்டெவில்ஸ் என்கிற பெயரில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய தில்லி அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

  ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி, மார்ச் 24 அன்று மும்பைக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai