இந்தியன் வெல்ஸ் ஏடிபி: காலிறுதியில் நடால், பெடரர்

இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால்,ரோஜர் பெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியன் வெல்ஸ் ஏடிபி: காலிறுதியில் நடால், பெடரர்


இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால்,ரோஜர் பெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றில் நடால் 6-3,6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் பிலிப் கிராஜிநோவிக்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 
மற்றொரு ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கைல் எட்மண்டை வென்றார். பெடரர் காலிறுதியில் போலந்தின் ஹீயுபர்டை சந்திக்கிறார்.
 மகளிர் காலிறுதி ஆட்டத்தில் எலினா விட்டோலினா 4-6, 6-4, 6-4 என்றசெட் கணக்கில் மார்கெட்டா ஆன்டொருசுவாவை வென்றா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதே போல் வீனஸ் வில்லியம்ஸ், ஏஞ்சலீக் கெர்பர் ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com