ஐபிஎல் போட்டிகளால் ஏற்படும் சுமையை சமாளிப்பது இந்திய வீரர்களின் பொறுப்பு- கோலி

உலகக் கோப்பை போட்டிக்கு நல்ல உடல்தகுதியுடன் இருக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளால் ஏற்படும் ஆட்ட சுமையை சமாளிப்பது வீரர்களின் பொறுப்பாகும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


உலகக் கோப்பை போட்டிக்கு நல்ல உடல்தகுதியுடன் இருக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளால் ஏற்படும் ஆட்ட சுமையை சமாளிப்பது வீரர்களின் பொறுப்பாகும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மே 30-ஆம் தேதி ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் பிரபலமான ஐபிஎல் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கி மே மாத மத்தியில் முடிவடைகிறது. உலகக் கோப்பையே பிரதானமான போட்டி ஆதலால், பல்வேறு நாடுகளின் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் ஆட அனுமதிப்பதில் தயக்கம் காண்பிக்கின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
ஐபிஎல் போட்டிகளால் ஏற்படும் ஆட்ட சுமையை விவேகமாக சமாளிப்பது இந்திய வீரர்களின் பொறுப்பாகும்.  நான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என நமது வீரர்களை கூறவில்லை. ஆனால் இதனால் ஏற்படும் சுமையை விவேகமாக சமாளியுங்கள் எனத் தான் கூறியுள்ளேன். உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஆனால் ஐபிஎல் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது.
உடல்தகுதியை பராமரிக்க சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. 
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு கடைசி 3 ஒருநாள் ஆட்டங்களில் தோல்வியுற்ற நிலையில் இந்திய அணி உள்ளது. இந்த தோல்வியால் வீரர்கள் பதற்றமடையவில்லை. கடந்த சில மாதங்களாக சிறப்பாக ஆடி வருகிறோம். சரியான கலவை கொண்ட அணியாக நமது அளி திகழும்.
ஹார்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைவார். அதன் பின்பு பேட்டிங், பந்துவீச்சு போன்றவற்றில் வாய்பபுகள் நமக்கு கிடைக்கும். உலகக் கோப்பையில் அழுத்தம் ஏற்படும் நேரங்களில் சிறந்த முடிவுகளை எடுப்போம். யாருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அவர் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். ஒரு தொடரில் சில வீரர்களை களமிறக்கி பார்க்கும் போது தான்அவர்களது திறமை வெளிப்படுகிறது.
நாட்டுக்காக ஆடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் வெல்ல உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக தீவிர ஆட்டத்தில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் 2 மாதங்கள் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று மகிழட்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com