செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள 4 நாள் பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன் போட்டியில் நீரஜ் சோப்ரா உள்பட சிலரைத் தவிர அனைத்து வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ஆசிய சாம்பியன் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தேர்வுச் சுற்றாகவும் பெடரேஷன் கோப்பை போட்டி அமைந்துள்ளது.


அஸ்டானாவில் நடைபெற்ற உலக அணிகள் செஸ்சாம்பியன் போட்டி இறுதி சுற்றில் ரஷியாவிடம் போராடி தோல்வியுற்றது இந்திய ஆடவர் அணி. அணிகள் பட்டியலில் 11 புள்லிகளுடன் 4-ஆவது இடத்தைப் பெற்றது. மகளிர் பிரிவில் இந்திய அணி 9 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.


புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த ஹீரோ சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் ஐலீக் முன்னாள் சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணி புறக்கணித்தது. 


இந்திய அணியின் மூத்த வீரர் தோனியின் முக்கியத்துவத்தை குறைவாக எடைபோட வேண்டாம் என ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். மிடில் ஆர்டரில் தோனியின் அனுபவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தனது சுட்டுரையில் அவர் கூறியுள்ளார்.


பிசிசிஐ வழக்குகளை கையாள மத்தியஸ்தராக மூத்த வழக்குரைஞர் பி.எஸ். நரசிம்மாவை நியமித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com