ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை: இறுதி சுற்றில் தீபா கர்மாகர்

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டி வால்ட் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை: இறுதி சுற்றில் தீபா கர்மாகர்


உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டி வால்ட் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் 2016-இல் 4-ஆவது இடம் பெற்ற தீபா (25) மிகவும் கடினமான 540 வால்ட் பிரிவில் முதன்முறையாக பங்கேற்றார். 
இரு தகுதிச் சுற்றுகளில் 14.466, 14.133 புள்ளிகளுடன் மொத்தம் சராசரி 14.299 புள்ளிகளை பெற்றார் அவர். இதன் மூலம் மூன்றாவது இடத்துடன் இறுசிச் சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் ஜேட் கரே, மெக்ஸிகோவின் அலெக்ஸா மொரேனா முதலிரண்டு இடங்களைப் பெற்றனர். முதல் 8 இடங்களைப் பெறும் வீராங்கனைகள் இறுதிச் சுற்றில் தகுதி பெறுவர். வரும் சனிக்கிழமை வால்ட் இறுதி நடைபெறுகிறது.
சனிக்கிழமை தீபா பதக்கம் வென்றால், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் படியாக இது அமையும். 
மூட்டுவலி காரணமாக கடந்த 2018 ஜகார்த்தா ஆசிய போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com