ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தீபா கர்மாகர் காயம்

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை வால்ட் இறுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் காயமுற்று வெளியேறினார்.
ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தீபா கர்மாகர் காயம்

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை வால்ட் இறுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் காயமுற்று வெளியேறினார்.
 திரிபுராவைச் சேர்ந்த 25 வயதான தீபா, சனிக்கிழமை நடைபெற்ற வால்ட் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டார். அப்போது ஏற்கெனவே காயமுற்றிருந்த மூட்டில் மேலும் காயம் அதிகமாகியது.
 முதல் கட்ட தேர்வில் கீழிறங்கும் போது, காயம் பட்டதால், அவரால் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை. மேலும் விரைவில் நடைபெறவுள்ள டோஹா உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் தீபா விலகி விட்டார்.
 இதனால் 2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் அவரது முயற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு திரும்பியவுடன் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர் ஆசிய, உலக சாம்பியன் போட்டிகளில் பங்கேற்பார். வரும் ஜூன் 13-16 தேதிகளில் மங்கோலியாவில் ஆசிய சாம்பியன்ஷிப்பும், அக்டோபர் 4-13 தேதிகளில் ஜெர்மனியில் உலக சாம்பியன்ஷிப்பும் நடக்கிறது. உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டால் தீபா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என ஜிஎப்ஐ துணைத் தலைவர் ரியாஸ் பட்டி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com