பயிற்சியை தொடங்கினர் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2019 போட்டியின் 12-ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை தனது பயிற்சியை தொடங்கியது.
பயிற்சியை தொடங்கினர் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2019 போட்டியின் 12-ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை தனது பயிற்சியை தொடங்கியது.
 சென்னையில் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானப் பகுதியிலேயே உறங்கி, காலையில் கவுண்டர்கள் திறந்தவுடன் முண்டியடித்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
 போலீஸார் மிகுந்த சிரமப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். தொடக்க ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.
 தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதல் ஆட்டத்துக்கு தயாராகும் வகையில் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். தோனி, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, கேஎம்.ஆசீப், என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி மேற்பார்வையில் பயிற்சி செய்தனர். இதில் உள்ளூர் வீரர்கள் சர்மா, ஆஸீப், ஜெகதீசன் ஆகியோர் 6-ஆம் தேதி முதலே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 அயல்நாட்டு வீரர்களான டுபிளெஸிஸ், இம்ரான் தஹீர், ஆகியோரும் விரைவில் அணியுடன் இணையவுள்ளனர்.
 பயிற்சியாளர் மைக் ஹஸி கூறியதாவது: சிஎஸ்கே போன்ற அணியிடம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. முந்தைய சீசனில் இருந்து அதிக தன்னம்பிக்கையுடன் உள்ளோம். சென்னையில் இந்த முறை அதிக ஆட்டங்களில் ஆட முடியும் என நம்புகிறேன். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடினால் கூடுதல் பலம் என்றார் ஹஸி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com