ஐ லீக் விருதுகளை அள்ளியது சென்னை சிட்டி எஃப்சி

ஐ லீக் 2019 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி எஃப்சி அணி இந்த சீசனின் பல்வேறு விருதுகளையும் அள்ளியது.
ஐ லீக் சாம்பியன் வெற்றிக் கோப்பையுடன் சென்னை சிட்டி எஃப்சி அணியினர்.
ஐ லீக் சாம்பியன் வெற்றிக் கோப்பையுடன் சென்னை சிட்டி எஃப்சி அணியினர்.


ஐ லீக் 2019 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி எஃப்சி அணி இந்த சீசனின் பல்வேறு விருதுகளையும் அள்ளியது.
43 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணி, பலம் வாய்ந்த ஈஸ்ட்பெங்கால் அணியை பின்னுக்கு தள்ளி சாம்பியன்பட்டத்தை வென்றது. 
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சாம்பியன் கோப்பை அந்த அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த டிபன்டர் விருது-ராபர்டோ எஸ்லவா, சிறந்த ஹாப் மிட்பீல்டர் -நெஸ்டர் ஜீஸஸ், சிறந்த பார்வர்ட்-பெட்ரோ மான்ஸி, சையத் அப்துல்சிறந்த பயிற்சியாளர் விருது-அக்பர் நவாஸ், ஐ லீக் கதாநாயகன்-பெட்ரோ மான்ஸி, சிறப்பாட ஆடிய அணி-ஷில்லாங் லஜோங், சிறந்த கோல்கீப்பர்கள்-பிலால் கான் (ரியல் காஷ்மீர்), ஜஸ்மைல் சிங்.
அதிக கோலடித்தவர்-வில்லிஸ் பிளாஸா (சர்ச்சில் பிரதர்ஸ்), பெட்ரோ மான்ஸி (சென்னை).
இதுதொடர்பாக அணி உரிமையாளர் ரோஹித் ரமேஷ் கூறியதாவது: இந்த வெற்றி மூலம் தமிழகத்தை கால்பந்து வரைபடத்தில் நிலைநிறுத்தி உள்ளோம். மாநிலமும் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளது என்றார்.
கோப்பையை வழங்கி ஏஐஎப்எப் பொதுச் செயலர் குஷால் தாஸ் கூறுகையில் சிறந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு, செயல்பாடு, போன்றவற்றால் தொடங்கிய 3 ஆண்டுகளிலேயே சென்னை சிட்டி இத்தகைய சாதனையை படைத்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
ஐ லீக் சிஇஓ சுனோடா தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com