செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தானாவும், பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமியும் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றனர். மந்தானா 797 புள்ளிகளையும், கோஸ்வாமி 730 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.


ஹாக்கியை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் வகையில் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு கல்வி திட்டத்தை ஹாக்கி இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஆரம்பக் கட்டம் முதல் உயர்திறன் மற்றும் சர்வதேச அளவில பயிற்சியாளர்கள் உருவாக இது உதவும்.


சூப்பர் கோப்பை போட்டியில் நிலவும் சிக்கலை தீர்க்கும் வகையில் ஐ லீக் கால்பந்து அணிகளின் நிர்வாகிகளை சந்தித்துப் பேச அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பிரபுல் பட்டேல் முன்வந்துள்ளார்.


கிறைஸ்ட்சர்ச் மசூதி பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் மெஹிதி ஹாசன் வெள்ளிக்கிழமை ரபேயா அக்தர் பிரிதியை திருமணம் செய்து கொண்டார்.


மலேசியாவில் நடைபெறவுள்ள சுல்தான் அஸ்லான்ஷா போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பானுடன் மோதுகிறது இந்தியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com