டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்

டி10 லீக் போட்டியில் 25 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார் சர்ரே அணி வீரர் வில் ஜேக்ஸ்.
டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்


டி10 லீக் போட்டியில் 25 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார் சர்ரே அணி வீரர் வில் ஜேக்ஸ்.
ஐக்கிய அரபு நாடுகளின் துபை நகரில் டி10 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இங்கிலாந்து கவுண்டி அணிகளான சர்ரே-லங்காஷையர் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 20 வயதான சர்ரே வீரர் வில் ஜேக்ஸ் 25 பந்துகளில் சதமடித்தார். 30 பந்துகளில் மொத்தம் 105 ரன்களை குவித்தார் ஜேக்ஸ். இதில் 8 பவுண்டரி, 11 சிக்ஸர் அடங்கும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களையும் விளாசினார் ஜேக்ஸ். டி10 லீக் போட்டிக்கு அதிகாரபூர்வ அந்தஸ்து தரப்படவில்லை என்பதால், இது சாதனையாக கருதப்படாது.
சர்ரே அணி 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய லங்காஷையர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சர்ரே வீரர் காரேத் பேட்டி 4-21 விக்கெட்டை சாய்த்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com